
30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட்
செய்தி முன்னோட்டம்
இளமைப் பருவம் மற்றும் முதுமை பருவத்தில் உள்ளவர்களை விட நடுத்தர பருவத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் வேலைப் பளு காரணமாக குறைவாக தூங்குகிறார்கள் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் ஆய்வின் அறிக்கையின்படி நடுத்தர வயதினை அடையும்போது தூங்கும் நேரம் குறைகிறது.
அதாவது சராசரியாக 33 வயதாகும் போது, தூங்கும் நேரம் குறைகிறது.
முதுமை பருவத்தினை அடையும் பின்னர், தூங்கும் நேரம் மீண்டும் அதிகரிக்கிறது. சராசரியாக 53 வயதினை கடந்தவர்களின் தூக்கத்தின் நேரம் அதிகமாகிறது.
ஆய்வு முடிவுகள் ஒரு மனிதன் சராசரியாக 7.01 மணிநேரம் இரவில் தூங்குகிறார்கள். பெண்கள் ஆண்களை விட சராசரியாக 7.5 நிமிடங்கள் அதிகமாக தூங்குகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைவான நேர தூக்கம்
குறைவான நேர தூக்கம் என்பது பாதிப்பை ஏற்படுத்துமா?
லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் லியோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியவை இணைந்து ஓர் ஆய்வினை நடத்தின.
இதில் 63 நாடுகளில் இருந்து 730,187 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் "உலகம் முழுவதிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் மற்றவர்களை விட குறைவாக தூங்குகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சராசரியான தூக்கத்தின் நேரம் என்பது நாடுகளுக்கிடையே மாறுபடும் எனவும் ஆய்வின் பேராசிரியர்களில் ஒருவரான ஹ்யூகோ ஸ்பியர்ஸ் தெரிவித்துள்ளார்.
54 முதல் 70 வயதினர் சராசரியாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். இருப்பினும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து இது மாறலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.