புரோட்டீனுக்காக பன்னீர் சாப்பிடுறீங்களா? வெயிட் லாஸ் செய்ய இது சரிவராது... நிபுணர்கள் சொல்லும் சீக்ரெட் இதோ
செய்தி முன்னோட்டம்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்திற்காக அதிகம் நம்பியிருப்பது பன்னீரைத்தான். ஆனால், பன்னீர் உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த உணவு அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பன்னீரில் புரதம் இருந்தாலும், அதனுடன் அதிகப்படியான கொழுப்பும் கலந்திருக்கிறது. 100 கிராம் பன்னீரில் சுமார் 18-20 கிராம் கொழுப்பு உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்குத் தடையாக அமையலாம்.
விளக்கம்
ஊட்டச்சத்து நிபுணர்களின் விளக்கம்
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பன்னீர் ஒரு முழுமையான புரத மூலமாக இருந்தாலும், அதன் கலோரி அளவு அதிகம். நாம் வழக்கமாகச் சாப்பிடும் பன்னீர் மசாலா அல்லது வறுத்த பன்னீர் உணவுகளில் இன்னும் கூடுதல் கலோரிகள் சேர்கின்றன. எனவே, தசை வளர்ச்சிக்காக பன்னீர் சாப்பிடலாம், ஆனால் கொழுப்பைக் குறைக்க நினைப்பவர்கள் இதை அளவோடு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கடைகளில் கிடைக்கும் 'ஃபுல் கிரீம்' பனீரைத் தவிர்ப்பது நல்லது.
மாற்று
சிறந்த சைவ மாற்றுகள்
பன்னீருக்குப் பதிலாக குறைந்த கொழுப்பும் அதிக புரதமும் கொண்ட சில சிறந்த சைவ உணவுகளை நிபுணர்களை பரிந்துரைக்கின்றனர். சோயா சங்க்ஸ்: இதில் பன்னீரை விட மிகக் குறைந்த கொழுப்பும், இரண்டு மடங்கு அதிக புரதமும் உள்ளது. டோஃபு: சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோஃபு, பன்னீரைப் போன்ற சுவை கொண்டது, ஆனால் கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகக் குறைவு. பயறு வகைகள்: பாசிப்பயறு, கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மா போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதம் சரிசமமாக உள்ளது.
உட்கொள்ளும் முறை
எப்படி உட்கொள்ள வேண்டும்?
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பன்னீரை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதைச் சமைக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும். எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக கிரில் செய்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் தினசரி புரதத் தேவையை ஒரே உணவில் இருந்து பெறாமல், பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து பெறுவதே ஆரோக்கியமான எடை குறைப்பிற்கு வழிவகுக்கும்.