LOADING...
ஏசி இல்லாமலேயே வீட்டை ஜில்லென்று மாற்றலாம்! கோடை வெப்பத்தைத் தணிக்க இதோ 5 சூப்பர் டிப்ஸ்
ஏசி இல்லாமலேயே வீட்டை ஜில்லென்று மாற்றலாம்

ஏசி இல்லாமலேயே வீட்டை ஜில்லென்று மாற்றலாம்! கோடை வெப்பத்தைத் தணிக்க இதோ 5 சூப்பர் டிப்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
May 14, 2026
07:48 pm

செய்தி முன்னோட்டம்

சுட்டெரிக்கும் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசி வசதி இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய கவலை ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் வீட்டை எப்படிக் குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பது குறித்த தேடல் தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது. 40 டிகிரி வெப்பத்திலும் உங்கள் வீட்டை இயற்கையாகவே ஜில்லிப்பாக மாற்ற உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் இதோ:

ஜன்னல் திரைகளில் ஒரு சிறு மாற்றம்

மதிய நேர வெப்பத்தை வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பது எப்படி?

வீட்டின் வெப்பநிலையை அதிகரிப்பதில் ஜன்னல்கள் வழியாக நுழையும் நேரடி சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது. நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஜன்னல் கதவுகளை மூடி வைப்பதோடு, அடர் நிறத் திரைகளுக்குப் பதில் வெளிர் நிறப் பருத்தித் திரைகளைப் பயன்படுத்துங்கள். இன்னும் சிறப்பாக, ஜன்னல் திரைகளின் மீது சிறிதளவு தண்ணீரைத் தெளித்து வைத்தால், வெளியே இருந்து வரும் வெப்பக் காற்று அந்த ஈரப்பதத்தில் பட்டு வீட்டிற்குள் நுழையும் போது குளிர்ந்த காற்றாக மாறும். இது பழங்காலத்து 'வெட்டிவேர் திரை' முறையைப் போன்றது என்பதால், அறைக்குள் இயற்கையான குளிர்ச்சியையும் நறுமணத்தையும் ஒருசேரக் கொடுக்கும்.

வீட்டின் மொட்டை மாடி மற்றும் கூரையைப் பராமரித்தல்

வெப்பத்தை எதிரொலிக்கும் 'வொயிட் வாஷ்' தந்திரம்

வீட்டின் மேல்தளம் அல்லது கூரை நேரடியாகச் சூரிய ஒளியைச் சந்திப்பதால், அது வெப்பத்தை உறிஞ்சி இரவு நேரத்திலும் அறையை அனலாக வைத்திருக்கும். இதைத் தவிர்க்க, மொட்டை மாடியில் 'வெப்பப் பிரதிலிப்பு பெயிண்ட்' (Heat Reflective Paint) அல்லது வெள்ளை நிறச் சுண்ணாம்பைப் பூசுவது ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். வெள்ளை நிறம் சூரியக் கதிர்களை உறிஞ்சாமல் திருப்பி அனுப்புவதால், வீட்டின் உட்புற வெப்பநிலை சுமார் 3 முதல் 5 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய சிறிய மாற்றங்கள் கூட உங்கள் கோடை காலத்தை இனிமையாக மாற்ற உதவும்.

Advertisement

மின்விசிறியுடன் ஒரு சின்ன மேஜிக்

டேபிள் ஃபேன் மற்றும் ஐஸ் கட்டிகளின் அதிரடி கூட்டணி

உங்களிடம் ஏசி இல்லையென்றாலும், ஒரு டேபிள் ஃபேன் மற்றும் ஐஸ் கட்டிகள் இருந்தால் அறையை ஜில்லென்று மாற்ற முடியும். ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, அதை டேபிள் ஃபேனுக்கு முன்பாகவோ அல்லது அதன் பின்னால் காற்று உள்ளிழுக்கும் பகுடியிலோ வைத்து விடுங்கள். மின்விசிறி சுழலும் போது அந்த ஐஸ் கட்டிகளின் குளிர்ச்சியை அறை முழுவதும் பரவச் செய்யும். இது ஒரு தற்காலிகமான ஏர் கூலர் போலச் செயல்படும். இரவு நேரங்களில் தூக்கமின்மையால் தவிப்பவர்களுக்கு இந்த எளிய முறை ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

மின்சாதனப் பயன்பாட்டைக் குறைத்தல்

தேவையற்ற வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களுக்கு விடை கொடுங்கள்

நமது வீட்டில் உள்ள பல்புகள், கணினிகள் மற்றும் இதர மின்சாதனங்கள் செயல்படும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடுகின்றன. கோடை காலத்தில் தேவையில்லாத போது விளக்குகளை அணைத்து வைப்பது அறையின் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க உதவும். குறிப்பாக, பழைய வகை குண்டு பல்புகளுக்குப் பதில் எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவது வெப்பத்தை வெகுவாகக் குறைக்கும். மேலும், சமையல் செய்யும் போது வெளிப்படும் வெப்பம் வீடு முழுவதும் பரவாமல் இருக்க 'எக்ஸாஸ்ட் ஃபேன்' (Exhaust Fan) பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Advertisement