Loading...
30 வயதிற்குப் பின் உடல் தளர்ந்துவிடும்; Gen Z இளைஞர்களுக்கு எம்எஸ் தோனி பிட்னஸ் அறிவுரை
Gen Z இளைஞர்களுக்கு எம்எஸ் தோனி பிட்னஸ் அறிவுரை

30 வயதிற்குப் பின் உடல் தளர்ந்துவிடும்; Gen Z இளைஞர்களுக்கு எம்எஸ் தோனி பிட்னஸ் அறிவுரை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
07:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, பிரபல எழுத்தாளர் ஜாவேத் அக்தருடன் இணைந்து பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில், தற்போதைய ஜென் ஜி (Gen Z) மற்றும் ஜென் ஆல்ஃபா இளைஞர்களின் ஆரோக்கியம் குறித்து பேசியுள்ளார். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதை ஏதோ பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடாமல், உடனே ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இளமையில் செய்யும் இந்த முதலீடு 30 வயதைக் கடந்த பின் மிகப்பெரிய பலனை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன வாழ்க்கைமுறை

மாறிவிட்ட நவீன வாழ்க்கைமுறையும் குறையும் உடலியக்கமும்

இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், முந்தைய தலைமுறையினர் அன்றாட வாழ்வில் அதிக அளவில் நடந்து சென்று உழைத்தனர் என்று தோனி சுட்டிக்காட்டினார்.

ஆனால் இன்றைய நவீன உலகில் வீடு, கார், ஆட்டோ, அலுவலகம் என பெரும்பாலான நேரத்தை உட்கார்ந்த நிலையிலேயே கழிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இத்தகைய உடலியக்கமற்ற வாழ்க்கை முறையுடன் அதிக சர்க்கரை மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவது, 30 வயதைக் கடக்கும் போது உடலில் பல கடுமையான நோய்களை உண்டாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

பள்ளிப் பருவம்

பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் வாழ்க்கைப் பாடங்கள்

அனைவரும் தொழில்முறை விளையாட்டு வீரர்களாக மாற வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட தோனி, பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகள் ஏதேனும் ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பேட்மிண்டன், கிரிக்கெட் அல்லது ஓட்டம் என எதுவாக இருந்தாலும் முயற்சியத்துப் பார்க்கும் போதுதான் அவரவர் திறமை தெரியவரும்.

மேலும், விளையாட்டுகளில் ஏற்படும் தோல்வி தங்களின் பலவீனங்களை அடையாளம் காணவும், வெற்றி அந்த சாதனையைத் தலைக்கனம் இல்லாமல் கையாளவும் கற்றுக்கொடுக்கும்.

இத்தகைய மன உறுதி வாழ்க்கைப் பயணத்திற்கும் மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

மகிழ்ச்சியான குடும்பம்

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழத் தேவைப்படும் உடல்தகுதி

நமது பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளைப் பராமரிப்பது மட்டுமன்றி, அவர்களுடன் இணைந்து ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்ச்சியாக இருக்கவும் போதுமான உடல்தகுதி அவசியம் என தோனி வலியுறுத்தினார்.

தினமும் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டிற்காக ஒதுக்கி, மிதமான சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி வாரம் 150-300 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களை சுற்றியுள்ள அன்பு உள்ளங்களுக்காக உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என தோனி கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT