காதலர் தின ஸ்பெஷல்: உலகெங்கிலும் உள்ள அழகான கடலுக்கடியில் இயங்கும் உணவகங்கள்
செய்தி முன்னோட்டம்
பெருங்கடல்கள் அனைத்தும் பிரம்மிப்பூட்டும் பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. அப்படிபட்ட கடலின் உள்ளே அமர்ந்து உணவருந்துவது என்பது நிச்சயம் வாழ்நாள் அனுபவமாகவே இருக்கும்.
அப்படி உலகெங்கிலும் அமைந்துள்ள, ரொமான்டிக்கான, கடலுக்கு அடியில் இயங்கும் உணவகங்களின் பட்டியல் இதோ:
இத்தா உணவகம், மாலத்தீவுகள்: கடலின் மேற்பரப்பிலிருந்து ஐந்து மீட்டர் கீழே அமைந்துள்ள இத்தா உணவகம், உலகின் முதல் கண்ணாடியால் கட்டப்பட்ட கடலடியில் இயங்கும் உணவகமாகும்.
L'Oceanografic Submarino உணவகம், ஸ்பெயின்: கண்கவர் வட்ட வடிவ மீன்வள மையத்தின் ஊடே அமைந்துள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் உணவகத்தில், பல நேர்த்தியான மெடிட்டெரேனியன் உணவுகளை உண்ணலாம். இந்த உணவகத்தின் கண்கவர் ஜெல்லிமீன் தீம் மேற்கூரை, மிகவும் வசீகரமாய் இருக்கும்.
உணவகங்கள்
சுறாக்கள் நடுவே சுவையான உணவு!
போஸிடான் ரிசார்ட், பிஜி: பிஜியில் உள்ள ஒரு தனியார் தீவில் அமைந்துள்ள Poseidon கடலடி உணவகம், 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட்டில், திருமண விழாக்கள், காதல் கொண்டாட்டங்கள் என அனைத்தும் இங்கே கொண்டாடலாம்.
கார்கோ ஹோல்ட் உணவகம், தென்னாப்பிரிக்கா: சுறாக்களுடன் உணவருந்த இந்த உணவகத்திற்கு வரலாம். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள பாண்டம் என்ற கப்பலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகம், கடல் மற்றும் சுறா தொட்டிகளின் நடுவே செயல்படுகிறது.
Ossiano Michelin-Star Restaurant, துபாய்: துபாயில் உள்ள, Atlantis the Palm-இல் அமைந்துள்ள Ossiano Michelin-Star உணவகத்தில், நேரடி இசையுடன் கடல் உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் உணவு வகைகளுக்கான பொருட்கள் கடலில் இருந்தே பெறப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.