களைகட்டிய ஸ்பெயினின் பிரபல La Tomatina 2024 திருவிழா; வைரலாகும் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
நமது ஊரில் ஹோலி பண்டிகை எப்படி புகழ்பெற்றதோ அதேபோல, ஸ்பெயினின் புனோல் நகரம் பிரபல தக்காளி திருவிழாவிற்கு புகழ் பெற்றது.
பிரபல பாலிவுட் படமான 'ஜிந்தகி நா மிலேகி டோபரா'வில் இந்த புகழ்பெற்ற தக்காளி திருவிழாவின் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
1945ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அணிவகுப்பில் டீன் ஏஜ் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்புக்குப் பிறகு தான் இந்த தக்காளி திருவிழா முதன்முதலில் தொடங்கியது.
இது உலகின் மிகப்பெரிய உணவு சண்டை என்ற நிலையை அடைந்து, விரைவில் நகரின் பிரபலமானாக பாரம்பரியமாக உருவெடுத்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-28 அன்று இந்த கொண்டாட்டத்தைக் காண உலகெங்கும் இருந்து மக்கள் கூடுவது வழக்கம்.
இந்த ஆண்டும் ஆகஸ்ட் 28(நேற்று) அன்று புனோலில் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#EnDirecto ▶ Tomatina de Buñol https://t.co/rZDfzjU1u2
— EL MUNDO (@elmundoes) August 28, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
DIRECTO 📺 | La Tomatina de Buñol (Valencia) https://t.co/2qKsUwt2Yw
— RTVE Noticias (@rtvenoticias) August 28, 2024