காதலர் தினம் 2023: இன்று டெட்டி டே; அதன் முக்கியத்துவமும், வரலாற்று பின்னணியும்
காதலர் தின வாரத்தின் நான்காம் நாளான இன்று, டெட்டி நாளாக கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரம் முழுவதும், காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழாவாக கொண்டாடப்படுகிறது. பிப்., 14, காதலர் தினத்திற்கு முன்னர், ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களுக்கு ஏற்றாற்போல, காதலர்கள் தங்கள் பிரியமானவர்களிடம், அன்பைக் காட்டும்விதமாக பலவித பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். பூக்கள், கிரீட்டிங் கார்டுகள், சாக்லேட்டுகள், என விதவிதமான பரிசுகளில் காதலை வெளிப்படுத்தலாம். அப்படி கொண்டாடப்படும் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு முக்கியத்துவத்துவம் உண்டு. இந்த டெட்டி நாளின் முக்கியத்துவத்தை பற்றி சிறு குறிப்பு இங்கே:
டெட்டி டே வரலாறு
இந்த டெட்டி டே அன்று, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு மென்மையான பொம்மையை பரிசளிப்பது, அவர்கள் உங்களுடன் செலவழித்த பொன்னான தருணங்களையும் நேரத்தையும் அவர்களுக்கு நினைவில் வைத்துக்கொள்வதை குறிக்கும். இந்த நாள், இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். டெட்டி பொம்மைகள், பல ஆண்டுகாலமாக வழங்கப்படும் பிரபலமான பரிசுப் பொருளாக இருந்து வருகின்றன. காரணம், கரடிகள் ஒன்றுக்கொன்று அரவணைப்பாகவும், ஆறுதலாகவும் இருப்பதே. ஒரு நபர், மற்றொருவருக்கு உணர்த்தும் அன்பு மற்றும் அக்கறையின் பிரதிபலிப்பாக, இந்த டெட்டி பொம்மை பரிசாக அளிக்கப்படுகிறது. டெடி டே, முன்னாளில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்தது. தற்போது அது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.