இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஜைன மத நூல்களின்படி, மகாவீரர், கிமு 599 ஆம் ஆண்டு, பங்குனி மாதத்தில், வளர்பிறையின் 13 -ஆம் நாள் பிறந்தார். ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிறுவிய, 24வது மற்றும் கடைசி ஜெயின் தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார்.
மகாவீரர், பிறந்தபோது வர்தமான் என்று பெயரிடப்பட்டார். அவர், தனது 30 வயதில், அனைத்தையும் துறந்து, தீவிர துறவறத்தை, 12 ஆண்டுகளாக கடைபிடித்தார் எனக்கூறப்படுகிறது. அவர் கிமு 527 இல் மோட்சத்தை அடைந்தார்.
மஹாவீரர் ஜெயந்தி
மகாவீரரின் வரலாறு மற்றும் அவரின் போதனைகள்
மகாவீரர், கிமு 599 இல், இக்ஷ்வாகு வம்சத்தின் மன்னரான சித்தார்த்தா மற்றும் ராணி திரிஷாலா ஆகியோருக்கு, பீகாரில் உள்ள க்ஷத்ரியகுண்டில் பிறந்தார்.
தந்தையின் மரணத்திற்கு பின்னர், சிறு வயதிலேயே அரியணை ஏறிய மஹாவீரர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். பின்னர், உலக இன்பங்கள் அனைத்தையும் துறந்து, வாழ்வில் ஞானம் பெற முடிவு செய்தார்.
அதன் பின்னர், தனது வாழ்நாள் முழுவதும், தனது சீடர்களுக்கு அஹிம்சை (அகிம்சை), சத்ய (உண்மை), அஸ்தியா (திருடாமை), பிரம்மச்சரியம் (கற்புரிமை) மற்றும் அபரிகிரகம் (பற்றற்ற தன்மை) ஆகியவற்றைப் போதித்தார்.
இவரது போதனைகளே, ஜைன ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.