Loading...
வெளிநாடு சுற்றுலா செல்பவர்களுக்கு: புர்ஜ் கலீஃபா, யுனிவர்சல் ஸ்டுடியோஸ் டிக்கெட் இனி யுபிஐ மூலம் முன்பதிவு செய்யலாம்
புர்ஜ் கலீஃபா, யுனிவர்சல் ஸ்டுடியோஸ் டிக்கெட் இனி யுபிஐ மூலம் முன்பதிவு செய்யலாம்

வெளிநாடு சுற்றுலா செல்பவர்களுக்கு: புர்ஜ் கலீஃபா, யுனிவர்சல் ஸ்டுடியோஸ் டிக்கெட் இனி யுபிஐ மூலம் முன்பதிவு செய்யலாம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2026
08:18 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பயணிகள் இனி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச சுற்றுலா தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை, இந்தியாவில் பயன்படுத்தும் யுபிஐ செயலிகள் மூலமாகவே ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். துபாயில் உள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா மற்றும் சிங்கப்பூரின் யுனிவர்சல் ஸ்டுடியோஸ், சிங்கப்பூர் ஓஷனேரியம் போன்ற இடங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) அன்று இந்திய நிதி அமைச்சகம் இப்புதிய வசதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தைகளில் என்பிசிஐ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டாண்மை

இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகத்தின் (என்பிசிஐI) சர்வதேசப் பிரிவான என்ஐபிஎல், அந்தந்த நாடுகளின் முன்னணி பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை சாத்தியமாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நியோபே மற்றும் எமார் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்ததன் மூலம், ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐயைப் பயன்படுத்தும் முதல் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலாத் தலமாக புர்ஜ் கலீஃபா மாறியுள்ளது.

அதேபோல் சிங்கப்பூரில் ஃபோமோ பே நிறுவனத்துடன் இணைந்து ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

10 நாடுகள்

உலகளவில் 10 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் இந்திய யுபிஐ சேவை

தற்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரீஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை, கம்போடியா மற்றும் கிரீஸ் ஆகிய 10 நாடுகளில் இந்திய பயணிகள் யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

பிரான்ஸின் ஈபிள் டவர் நுழைவுச் சீட்டு முன்பதிவுக்கு ஜனவரி 2024-இல் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, உஸ்பெகிஸ்தான் நாடு விரைவில் யுபிஐ சேவையை ஏற்கும் 11-வது நாடாக இணையவுள்ளது.

ADVERTISEMENT

இந்தியர்களுக்கான நன்மைகள்

இந்தியப் பயணிகளுக்கான நன்மைகளும் சர்வதேச டிஜிட்டல் வளர்ச்சியும்

சர்வதேச அளவில் யுபிஐ சேவை விரிவடைந்து வருவதன் மூலம், வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகள் சர்வதேசக் கடன் அல்லது பற்றட்டைகளை சாார்ந்திருக்கத் தேவையில்லை.

தங்களுக்குப் பழக்கப்பட்ட ஜிபே, போன்பே அல்லது பீம் போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவே விரைவாகவும் பாதுகாப்பாகவும் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

இத்தகைய எல்லை கடந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகள், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பெருமளவில் உதவுவதுடன் இந்தியாவின் டிஜிட்டல் நுட்பத்தையும் உலகரங்கில் உயர்த்திப் பிடித்துள்ளன.

ADVERTISEMENT