LOADING...
இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரிப்பு: காரணங்களும் அறிகுறிகளும்!
இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரிப்பபதற்கான காரணங்கள்

இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரிப்பு: காரணங்களும் அறிகுறிகளும்!

எழுதியவர் Vasuki
Jun 28, 2026
01:11 pm

செய்தி முன்னோட்டம்

கிரியேட்டினின் (Creatinine) என்பது நமது உடலில் உள்ள தசைகள் ஆற்றலைப் பயன்படுத்தும் போது இயற்கையாக உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும். ஆரோக்கியமான உடலில், இந்தத் தேவையற்ற கழிவுப் பொருள் சிறுநீரகங்களால் இரத்தத்திலிருந்து வடிகட்டப்பட்டு, சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது. எனினும், ஏதேனும் காரணங்களால் இரத்தத்தில் இதன் அளவு அதிகரிக்கும் போது, அது பல்வேறு கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில், இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு உயர்வதற்கான முதன்மைக் காரணங்கள் மற்றும் அதன் தொடக்கக்கால அறிகுறிகளைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

#1

சிறுநீரகப் பிரச்சனை

சிறுநீரகப் பிரச்சனைகள் காரணமாக இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகமாகலாம். சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், இரத்தத்தில் கழிவுப் பொருட்கள் சேரும். இதில் கிரியேட்டினின்னும் அடங்கும். இந்த நிலை, சிறுநீரகங்களின் செயல்பாட்டைப் பாதித்து, பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். அதனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

#2

தசைகள் அதிகம் சேதமடைவது

தசைகள் அளவுக்கு அதிகமாக சேதமடைவதும் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவை அதிகரிக்கலாம். உடலில் தசைகள் அதிகம் சேதமடையும் போதோ அல்லது காயமடையும் போதோ, கிரியேட்டினின் அளவு அதிகரிக்கும். கடுமையான காயம், தீக்காயம் அல்லது தீவிரமான நோய்த்தொற்று போன்றவற்றால் இது பொதுவாக ஏற்படும். இதுமட்டுமல்லாமல், நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளிடமும் இந்தப் பிரச்சனை காணப்படுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் டாக்டரை அணுகுவது மிக முக்கியம்.

Advertisement

#3

உடலில் நீர்ச்சத்து குறைபாடு

உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரிக்கலாம். உடலில் போதுமான தண்ணீர் இல்லாதபோது, சிறுநீரகங்களால் சரியாகச் செயல்பட முடியாது. இதனால் இரத்தத்தில் கழிவுப் பொருட்கள் சேர்ந்துவிடும். இந்த நிலை ஆபத்தானது. வேறு பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் இது வழிவகுக்கலாம். ஆகவே, உடல் ஹைட்ரேட் ஆக இருக்கவும், சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

Advertisement

#4

அதிக சர்க்கரை அளவு

சர்க்கரை நோய், அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதும் கிரியேட்டினின் அளவை அதிகரிக்க ஒரு காரணமாக அமையலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள திசுக்களுக்கு சர்க்கரை சரியாகச் சென்று சேராததால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகங்கள் பலவீனமடைந்து, அவற்றால் சரியாகச் செயல்பட முடிவதில்லை. இந்தக் காரணத்தினால், இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகமாகிறது.

#5

சில மருந்துகளின் பயன்பாடு

சில மருந்துகளை உட்கொள்வதும் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, சிறுநீரகங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் அல்லது அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கும் மருந்துகள் காரணமாக இது நிகழலாம். நீங்கள் இதுபோன்ற மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், டாக்டரை அணுகி, மருந்தின் அளவை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது வேறு மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் நிறுத்திவிடாதீர்கள். இதன் மூலம் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

Advertisement