வெயில் காலத்தில் பாலை விரைவில் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
கோடக்காலத்தில் பால் விரைவாகவே கெட்டுப் போகிறதா? அது ஏன், அதனை எப்படி தடுக்கலாம் என்பதனை இங்கே நாம் பார்க்கலாம். எந்தவொரு உணவுப் பண்டத்திலும் இயற்கையாகவே பாக்டீரியாக்கள் இருக்கும். அதிக வெப்பநிலையில் இந்த பாக்டீரியாக்கள் பெருகும். கோடைக் காலத்தில் பாலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலை காரணமாக பெருகி லாக்டோஸ் என்ற சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றும். இதன் காரணமாகவே பால் விரைவாகவே கெட்டுப் போகவே அல்லது புளித்துப் போகவோ செய்யும்.
பால்
இதனைத் தடுப்பது எப்படி?
பாலை 4 டிகிரி செல்சியல் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையில் சேமிப்பதன் மூலமாக இதனை நாம் தடுக்கலாம். பாலை பலரும் திறந்த நிலையிலேயே வைத்திருக்கின்றனர். அப்படி வைக்கக்கூடாது. மூடி போட்டு மூடியே வைக்க வேண்டும். சிலர் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சும் முறையைப் பின்பற்றுகின்றனர். இதுவும் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை. மாறாக காய்ச்சிய பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதே பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் சரியாகக் கழுவதாக பாத்திரங்களில் பாலைப் பயன்படுத்துவதனாலும் அது உடனடியாக கெட்டப் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே நன்கு கழுவிய சுத்தமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாலை கேஸ் ஸ்டவ்வின் அருகில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு வெப்பமான இடங்களில் இருந்து பாலை தள்ளியே வைக்க வேண்டும்.