Page Loader
10 வயதிற்குள் 50 நாடுகள் சுற்றிபார்த்த சுட்டி குழந்தை, அதுவும் ஸ்கூலுக்கு லீவு எடுக்காமலே..எப்படி சாத்தியம்?
10 வயதிற்குள் 50 நாடுகள் சுற்றிபார்த்த உலகம் சுற்றும் சுட்டி குழந்தை!

10 வயதிற்குள் 50 நாடுகள் சுற்றிபார்த்த சுட்டி குழந்தை, அதுவும் ஸ்கூலுக்கு லீவு எடுக்காமலே..எப்படி சாத்தியம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

லண்டன் நகரை சேர்ந்த இந்திய தம்பதி- அவிலாஷா மற்றும் தீபக் திரிபாதி. இவர்கள் இருவருக்கும் உலகத்தை சுற்றிப்பார்பது மிகவும் இஷ்டம். எனினும், தங்கள் மகளும் தங்களுடன், சிறுவயது முதல் இந்த அனுபவத்தை பெற வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, தாங்கள் போகக்கூடிய அனைத்து ஊர்களுக்கும் தங்களுடைய மகளை கூடி சென்றுள்ளனர். 10 வயதே ஆன அவர்களுடைய மகள், அதிதி திரிபாதி, இதுவரை 50 நாடுகளை சுற்றிபார்த்துளார். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த நாடுகளை, பள்ளிக்கு லீவு போடாமல், கிளாஸ் எதையும் தவற விடாமல், சுற்றி பார்த்துள்ளார். அது எப்படி சாத்தியம் என ஆச்சரியப்படுபவர்களுக்கு இந்த கட்டுரை.

card 2

வாரம் முழுவதும் ஸ்கூல், வார இறுதியில் டூர்

இந்த தம்பதிகள், வாரத்தின் இறுதி நாட்களில் தான், டூர் பிளான் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை, பள்ளி விட்டதும், நேரே ஏர்போர்ட். பின்னர், திங்கள் அன்று, ஏர்போர்ட்டிலிருந்து நேரே ஸ்கூல். சொந்தமாக கார் வைத்திருந்தால் கூடுதல் செலவு என எண்ணி அந்த தம்பதியும், தங்கள் அலுவலகத்திற்கு செல்ல பொது போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். அவர்கள் டூர் செல்வதற்காக பணத்தை வருடம் முழுவதும் சேமிக்கின்றனர். அதனால் வார நாட்களில் வெளி சாப்பாடுக்கு நோ! முடிந்த வரை WFH ஆப்ஷனை தேர்வு செய்கின்றனர். இதன் மூலம் போக்குவரத்து செலவும் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 21 லட்சம் இந்த டூருக்காக செலவு செய்வதாக அவர்கள் கணக்கிட்டுள்ளனர். அதிதிக்கு மூன்று வயது ஆனதிலிருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியதாம்.