கோடை வெயில் ஆரம்பிச்சாச்சு..உங்கள் ஆரோக்கியத்தை காக்க சில ஹோம்மேட் ட்ரிங்க்ஸ்
இந்த வாரம் சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. அதற்குள்ளாகவே தமிழகம் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது. 'அடியே மாலா..ஃபேன 12 ஆம் நம்பர்ல வைடி" என்பது போல இருக்கிறது பலரது நிலமை. அதிலும் வெயிலில் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் நிலைமை மிகவும் பரிதாபம் தான். அதீத வெயில் உங்கள் உடலை வாட்டி வதைக்கும் போது, உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அதிலிருந்து தப்பிக்க நீங்கள் வீட்டிலேயே சில அற்புதமான கூல் ட்ரிங்க்ஸ் செய்யலாம். இதன் மூலம் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்தி கொள்ளலாம். அப்படி வீட்டிலேயே நீங்கள் தயாரிக்க கூடிய ஈஸியான ஜூஸ் ரெசிபிக்கள் இதோ:
வீட்டிலேயே செய்யக்கூடிய ஈஸி ஜூஸ் வகைகள்
பானகம்: பனைவெல்லம், சுக்கு, ஏலக்காய், புதினா இலை அல்லது வெப்ப இலை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப்பர் ஜூஸ், இரும்பு சத்து நிறைந்தது. அதோடு, வெப்ப இலை சிறந்த கிருமி நாசினியாகும். லெமன்-புதினா ட்ரின்க்: எலுமிச்சை ஜூஸ்சில், ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து, சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை சேர்த்து தயாரிக்கலாம். அதோடு, சிறிது புதினா தழையையும் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். கூல் ஆனதும் சூப்பரான லெமன்-மின்ட் கூலர் தயார். தர்பூசணி ஜூஸ்: தர்பூசணி பழம் கோடை காலத்தின் வரப்பிரசாதம். அதை பழமாகவும் சாப்பிடலாம், அல்லது ஐஸ் சேர்த்து ஜூஸ்சாக அரைக்கலாம். வெள்ளரி ஜூஸ்: உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பெற, வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கலாம். இது வயிற்று புண்ணையும் சரி செய்கிறது.