நிமிஷத்துல மூக்கடைப்பு நீங்கும்! சைனஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!
செய்தி முன்னோட்டம்
சைனஸ் எனப்படும் மூச்சுப்பாதை அடைப்பு, கடுமையான தலைவலி, மூச்சடைப்பு மற்றும் முகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பல நேரங்களில் மூக்கின் வழியாக நீர் செலுத்தும் முறைகள் (Neti pots) அனைவருக்கும் செட் ஆகாது. அத்தகைய சூழலில், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகள் உங்களுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும். இதுகுறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
எளிய வழிகள்
உடனடி நிவாரணம் தரும் எளிய வழிகள்
ஆவி பிடித்தல் (Steam Inhalation): சுடுதண்ணீரில் சிறிது புதினா இலைகள் அல்லது யூகலிப்டஸ் தைலம் சேர்த்து ஆவி பிடிப்பது, மூக்கில் உள்ள சளியை இளக்கி வெளியேற்ற உதவும். இது சுவாசப் பாதையை உடனடியாகத் திறக்கும். வெதுவெதுப்பான ஒத்தடம் (Warm Compress): ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்கலாம். நீரேற்றம் (Stay Hydrated): அதிகப்படியான நீர், இளநீர் அல்லது மூலிகை டீ குடிப்பது உடலில் உள்ள சளியின் அடர்த்தியைக் குறைத்து, அது எளிதாக வெளியேற உதவும்.
தலையணை
தலையணை மற்றும் உப்பு நீ சிகிச்சை
தலை உயர்த்திப் படுத்தல் (Elevate Your Head): தூங்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை வைத்து தலையைச் சற்று உயர்த்திப் படுப்பது, மூக்கின் உள்ளே நீர் தேங்குவதைத் தடுத்து எளிதாக மூச்சு விட உதவும். மூலிகை பானங்கள் (Herbal Drinks): இஞ்சி, துளசி மற்றும் மிளகு கலந்த கஷாயம் அல்லது தேநீர் குடிப்பது சைனஸ் தொற்றை எதிர்த்துப் போராடவும், மூக்கடைப்பைச் சரிசெய்யவும் உதவும். உப்பு நீர் சிகிச்சை (Saline Spray): சுத்தமான நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து மூக்கின் துவாரங்களைச் சுத்தம் செய்வது கிருமிகளை நீக்கி, வீக்கத்தைக் குறைக்கும்.
முன்னெச்சரிக்கை
உணவுக் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை சளியை அதிகப்படுத்தக்கூடும். குறிப்பாக குளிர்காலங்களில் காது மற்றும் தலைப்பகுதியை மறைக்கும் வகையில் ஆடைகளை அணிவது மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேற்கூறிய இயற்கை வழிகள் தற்காலிக நிவாரணத்தை அளிக்கும். இருப்பினும், உங்களுக்குத் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் மூக்கடைப்பு இருந்தாலோ, காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது மூச்சுக் காற்றில் துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.