எடை குறைப்பிற்கு உதவும் சில டான்ஸ் வகைகள்!
எந்த ஒரு மனிதனும், அதீத உற்சாகத்தில் இருக்கும் போது, தன்னையறிமால் நடனம் ஆடுவான். பிறந்த குழந்தை முதற்கொண்டு இசைக்கு ஆடாதவர்களே இருக்க மாட்டார்கள். காலில் தாளமிடுவது, தலையை ஆட்டுவது என ஏதேனும் சிறிய அசைவேனும் தருவார்கள். அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! எனினும் அந்த நடனமே உங்களுக்கு ஒரு ஒர்க் அவுட்டாக மாற்றிக்கொள்ளலாம். ஆமாம், சில வகை நடனங்கள் உங்கள் எடை குறைப்பிற்கு உதவுகிறது. அப்படி, உங்கள் வெயிட் லாஸ்-இற்கு உதவும் சில வகை நடனங்கள் இதோ: ஹிப்ஹாப்: மாடர்ன் நடன வகைகளின் ஒன்றான இந்த ஹிப்ஹாப் நடனம், ஒரு மணிநேரம் ஆடும்போது, கிட்டத்தட்ட 350 முதல் 400 கலோரிகள் வரை குறைகிறதாம்.
இப்போது டான்ஸ் ஆடிக்கொண்டே உடல் எடையை குறைக்கலாம்
பேலே(Ballet): இந்த வகை நடனத்தை கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் ஆகும். நுனி கால்களில் பாலன்ஸ் செய்து ஆடும் இந்த வகை நடனத்தில், உங்கள் காலில் இருக்கும் சதைகளுக்கு நல்ல ஒர்கவுட்டாக இருக்கும். ஸும்பா (Zumba): இப்போது பரவலாக தமிழ்நாட்டில் இந்த டான்ஸ்க்கென தனி ஸ்டுடியோக்கள் திறக்கப்படுகின்றன. வேகமான இசை, துள்ளலான நடனம், அதோடு உடலுக்கு எக்சர்சைஸ் என கலந்து ஆடும் இவ்வகை நடனம் இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களும் முயற்சி செய்யலாம். போல் டான்ஸ்: இந்த வகை நடனத்தில், உங்கள் உடல் பாகங்கள் மொத்தத்தையும் வளைத்து ஆட வேண்டி இருப்பதால், தேவையற்ற சதைகள் நீங்கி, மொத்த உடலும் டோன் ஆகிறது. Freestyle:எந்த வகை நடனத்தையும் சாராமல், இசைக்கேற்ப, உங்கள் மனம்போல ஆடுவது.