
லீவு விட்டாச்சு..கையை கடிக்காத ஃபாரின் டூர் போலாமா?
செய்தி முன்னோட்டம்
கொரோனா தொற்றின் காரணமாக இரண்டாண்டுகள் லாக்டவுனில் அடைபட்ட மக்கள், தற்போது சுற்றுலா செல்லவே அதிகம் செலவு செய்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.
உடல் ஒத்துழைக்கும் போதே, திரைகடல் செல்ல வேண்டும் என அனைவரும் நினைக்க துவங்கிவிட்டனர் போலும். ஆனால், ஃபாரின் டூர் என்பது அனைவருக்கும் சாத்தியப்படாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அதுதான் இல்லை. உங்கள் கையை கடிக்காத வகையில், உங்கள் பட்ஜெட்டிற்குள் செல்ல கூடிய வெளிநாடுகளும் உள்ளன.
இந்தியா ரூபாயின் டாலர் மதிப்பு ஒருபுறம் ஏறி கொண்டிருந்தாலும், சில நாடுகளின் கரன்சி மதிப்பு, இந்திய ரூபாயை விட குறைவே.
அப்படி இந்தியா ரூபாயை விட குறைவான மதிப்பை உடைய, அதே நேரம் நீங்கள் ஜாலியாக சுற்றி பார்க்கக்கூடிய இடங்கள் இதோ:
card 2
வியட்நாம் முதல் கம்போடியா வரை, இயற்கை எழில்மிக்க நகரங்கள்
கம்போடியா: நம் நாட்டின் ரூபாய் ₹1= 55.73 கம்போடிய ரியல் மதிப்பு உள்ளது. இந்திய அரசர்களால், இங்கே ஹிந்து மதம் செழித்து வளர்ந்தது. அதற்கு ஆதாரமாக அங்கோர்வாட் கோவில் உள்ளது.
கினியா: ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகள், பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளனர். ஆனால், சுற்றுலா செய்ய ஏற்ற இடம், இந்த கினியா தீவுகள். இந்திய மதிப்பில், ₹1 = 134.13 கினியன் பிராங்க்.
இந்தோனேஷியா: பல தொழில்நிறுவனங்கள் இந்த குட்டி நாட்டை, தங்கள் வணிகத்திற்கு தேர்வு செய்ய காரணம், அவர்கள் நாட்டின் ரூபாய் மதிப்பை விட, இங்கே குறைவான விலையில், தொழிலாளர்கள் ஏராளம் கிடைப்பதால் தான். இயற்கை அழகுடன் இருக்கும் இந்த தீவு நாடு, அண்மையில் பலரால் விரும்பப்படும் சுற்றுலாத்தளமாகும்.