LOADING...
நீரிழிவு நோயால் பாதிப்பது கண், இதயம் மட்டுமல்ல; மூட்டுகளையும் முடக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை
நீரிழிவு நோய் மூட்டுக்களையும் முடக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை

நீரிழிவு நோயால் பாதிப்பது கண், இதயம் மட்டுமல்ல; மூட்டுகளையும் முடக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
04:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 32 மில்லியனாக இருந்த நிலையில், இன்று 101 மில்லியனாக உயர்ந்துள்ளது. முக்கியமாக, இளம் வயதினரிடையே உடல் உழைப்பின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் டைப் 2 நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய் கண், இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது பொதுவாகத் தெரிந்தாலும், இது நம்முடைய உடல் இயக்கத்தை (Mobility) எப்படி அமைதியாகப் பாதிக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. உயர் இரத்தச் சர்க்கரை அளவு முழங்கால் வலி, கைகள் மற்றும் முதுகெலும்பில் நெகிழ்வுத்தன்மை குறைதல் போன்ற வியத்தகு வழிகளில் உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பாதிப்பு

எப்படி பாதிக்கிறது? 

முதுகுத் தண்டுவடம், கைகள், மற்றும் முழங்கால் ஆகியவற்றை நீரிழிவு நோய் எவ்வாறு பாதிக்கிறது என்பதை எலும்பியல் நிபுணர்கள் விளக்குகின்றனர். உயர் இரத்த சர்க்கரை அளவு, கண்ணைப் பாதிப்பது போலவே, முதுகெலும்பிலுள்ள சிறிய இரத்த நாளங்களையும் சேதப்படுத்துகிறது. இதனால் முதுகெலும்பு வட்டுகளுக்கு (Spinal Discs) சத்துக்கள் செல்வது தடைபட்டு, நாள்பட்ட முதுகு வலிக்கு வழிவகுக்கும். மேலும், நீண்ட கால நீரிழிவு நோயுடன் இணைந்த ஒரு பொதுவான குறைபாடு டயாபெடிக் கை மூட்டு வலி (Diabetic Cheiroarthropathy) ஆகும். இதில் மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்குக் காரணமான கொலாஜன் (Collagen) புரதத்தின் தன்மை மாறி, விரல்களை அசைப்பது கடினமாகிறது. முழங்கால் வலி, வீக்கம் மற்றும் மூட்டுக் கடினம் போன்றவை நீரிழிவு நோயால் மேலும் மோசமடைகின்றன.

தீர்வு

தீர்வு நடைமுறைகள்

நீரிழிவு தொடர்பான இயக்கப் பிரச்சினைகளைத் தடுக்க, மருந்துகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை அவசியம். மேலும், மூட்டுகளின் நிலைத்தன்மைக்காக மூட்டு ஆதரவு சாதனங்கள் (Orthopaedic Aids) மற்றும் பெல்ட்களைப் பயன்படுத்துவது, நீண்ட கால சேதங்களைத் தவிர்க்க உதவும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.