8 மணி நேரத்திற்கும் அதிகமான வேலையா? உங்களை அவ்வப்போது ரீசார்ஜ் செய்ய சில வழிகள்
செய்தி முன்னோட்டம்
தற்போது பல தனியார் அலுவலகங்களில், 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தான் வேலை நேரம் உள்ளது. டார்கெட், மீட்டிங் என ஏதோ ஒரு காரணத்திற்காக வேலை பளு கூடுகிறது.
தொடர்ந்து இத்தனை மணிநேரம் வேலை செய்வதால், உங்கள் மனதும், உடலும் சோர்வடையலாம். உங்களை உற்சாகமூட்டவும், புத்துணர்ச்சியுடன் வேலையை தொடரவும், சில எளிய குறிப்புகள்.
குட்டி வாக் போய்வரலாம்: வேலை பளு அதிகரிக்கும் போது, அவ்வப்போது ஒரு குட்டி வாக் போய் வரலாம். உங்கள் அறைக்குள் நடந்தாலும் சரி, வெளியே காலார சிறிது தூரம் நடந்து வந்தாலும் சரி, மீண்டும் வேலையை தொடங்கும் போது புத்துணர்ச்சியுடன் தொடர்வீர்கள்.
எளிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள்: Stretching என ஆங்கிலத்தில் கூறப்படும் எளிய பயிற்சிகளை அவ்வப்போது செய்யலாம்.
card 2
தொடர்ச்சியாக கணினி பயன்பாட்டை தவிர்க்கவும்
கணினி திரையில் இருந்து பிரேக் எடுக்கவும்: தொடர்ச்சியாக கணினி திரையை பார்ப்பதால், கண்கள் வறட்சி அடையும். அதனால் எரிச்சல், அரிப்பு ஏற்படும். இதனால் உங்கள் கவனம் சிதறடிக்கப்படும். உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, கண்ணினை திரையில் இருந்து 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை, 20 நிமிடங்கள் பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி சாப்பிடுங்கள்: வேலை நேரத்திற்கும், இரவு உணவிற்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தால், ஊட்டமளிக்கும், ஆரோக்கியமான சிற்றுண்டியுடன் ரீசார்ஜ் செய்வது நல்லது. புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட சிற்றுண்டிகளை தேர்வு செய்து உண்ணுங்கள்.