மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை அதிகம் உட்கொள்வது உடலுக்குக் கேடு; ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
மழைக்காலம் தொடங்கினாலே, தெருவோர உணவுகளை (ஸ்ட்ரீட் ஃபுட்களை) விரும்பி உண்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். பக்கோடா, பஜ்ஜி, சமோசா, சாட் போன்ற உணவு வகைகளை இப்பருவகாலத்தில் உட்கொள்வது தனி ஒரு சுவையாகும். ஆனால், இம்ழைக்காலமானது அதிக ஈரப்பதத்தோடும், புழுக்கத்தோடும் சேர்ந்து பல நோய்களையும் உடனே தழுவிக்கொண்டு வருகிறது. இது தெருவோர உணவுகளை உட்கொள்பவர்களுக்குப் பெரும் ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால் என்னென்ன உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து இனி விரிவாகக் காண்போம்.
#1
செரிமான பிரச்சனைகள்
மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை (ஸ்ட்ரீட் ஃபுட்களை) அதிகமாக உட்கொள்வதால் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். ஏனெனில், இக்காலகட்டத்தில் தெருவோர உணவுகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் தண்ணீரில் கிருமிகள் மிக வேகமாக வளரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்க்கிருமிகள் நம் உடலினுள் செல்லும் பொழுது அஜீரணம், வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
#2
வைரல் காய்ச்சல் வரும் வாய்ப்பு அதிகமாகும்
மழைக்காலத்தில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களில் தெருவோர உணவுகளை உட்கொள்ளும் பொழுது, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகும். அதுமட்டுமன்றி, மழைக்காலத்தின் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் புழுக்கமான வானிலை காரணமாக, தெருவோர உணவுகளை உண்பவர்களுக்கு மட்டுமன்றி, அதனைத் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கும் கூட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை உட்கொள்வதைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டு, அத்தகைய உணவு வகைகளைத் தூய்மையான முறையில் வீட்டிலேயே சமைத்துண்ண முயற்சி செய்ய வேண்டும்.
#3
புதிதாகச் சமைக்கப்பட்ட தெருவோர உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்
மழைக்காலத்தில் ஸ்ட்ரீட் ஃபுட்களை வாங்கும் பொழுது, அவை புதியதாகத் தயாரிக்கப்பட்டவையா என்பதைக் கவனிப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், பல கடைகளில் ஏற்கனவே செய்து வைக்கப்பட்ட பழைய உணவுகளையே மீண்டும் சூடுபடுத்தி வழங்குவதுண்டு. அவ்வாறு மறுபடி சூடேற்றப்படும் பொழுது பக்கோடா, பஜ்ஜி மற்றும் இதர தெருவோர உணவு வகைகளில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்கிருமிகள் பெருகத் தொடங்கி, உடலுக்குப் பெரும் தீங்கினை விளைவிக்கக்கூடும். எனவே, உணவுகளைப் புதியதாகவும், தூய்மையாகவும் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வாங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
#4
சுகாதாரத்தைக் கவனியுங்கள்
மழைக்காலத்தில் ஸ்ட்ரீட் ஃபுட்களை அதிகமாக உட்கொள்வதால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், அவ்வுணவுகளின் தூய்மையைக் கவனிக்கத் தவறுவதுதான். எனவே, நீங்கள் தெருவோர உணவுகளை வாங்கும் பொழுது, அவற்றின் சுகாதாரத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உதாரணமாக, உணவைத் தயாரிக்கும் பொழுது விற்பனையாளரின் கைகளும், கடை அமைந்திருக்கும் சூழலும் தூய்மையாக இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால், அந்தத் தெருவோர உணவை வாங்காமல் தவிர்ப்பதே உடல்நலத்திற்கு நல்லது.
#5
தெருவோர உணவு வகைகளை வீட்டிலேயே சமையுங்கள்
மழைக்காலத்தில் நமக்கு விருப்பமான தெருவோர உணவு வகைகளை வீட்டிலேயே சமைப்பதுதான் மிகவும் பாதுகாப்பான வழியாகும். ஏனெனில், வீட்டில் சமைக்கும் பொழுது நாம் அதன் தூய்மையையும் சுகாதாரத்தையும் முழுமையாகக் கண்காணிக்க இயலும்; இதனால் உடலுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. எனினும், வீட்டிலேயே இவற்றைத் தயாரித்தாலும் அதிகப்படியான எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுத்தமாகச் சமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முறைப்படி சமைத்தால், சுவையான மற்றும் பாதுகாப்பான உணவுகளை நீங்கள் மனநிறைவோடு உட்கொள்ளலாம்.