கோடை வெயிலில் புத்துணர்ச்சி அளிக்க உதவும் 5 மலர் பானங்கள்!
செய்தி முன்னோட்டம்
கோடைக்காலத்தில் குளிர்ச்சியானப் பானங்களை அருந்துவது உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடலை நீர்ச்சத்துடன் (Hydration) பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. எப்போதும் ஒரே மாதிரியானப் பானங்களையேத் தயாரித்து அருந்திச் சலிப்பு ஏற்பட்டுள்ளதா? இந்த முறை சற்றேப் புதுமையாக எதையாவது முயற்சி செய்யலாம் வாருங்கள். மலர்களிலிருந்துத் தயாரிக்கப்படும் சுவையான மற்றும் ஆரோக்கியமானச் சில பானங்களின் செய்முறைகளை இங்கே காண்போம். இவற்றினைத் தயாரிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியமும் இல்லை.
#1
குங்குமப்பூ மோர்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தயிர், குளிர்ந்த நீர், சில குங்குமப்பூ இழைகள், சுவைக்கேற்ப சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். இந்த உட்பொருட்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்றாக இணையும் வகையில் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். தயார் செய்த இந்தக் கலவையை ஒரு ஜாடியில் வடிகட்டி, அதில் தேவையான அளவு ஐஸ் கட்டிகளைச் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
#2
ரோஜா கூலர்
முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான ரோஜா இதழ்களைச் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை இட்டு நன்றாகக் கிளறவும். இக்கலவையை மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும். இதழ்களின் சாறு இறங்கியவுடன், தேவையான அளவு நீர் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். தயார் செய்த இந்தக் கலவையை வடிகட்டி ஒரு ஜாடியில் ஊற்றிக் கொள்ளவும். இதில் புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு சோடா (Soda) சேர்த்து மென்மையாகக் கலக்கவும். பானத்தின் சுவையையும் தோற்றத்தையும் மேம்படுத்த, அதில் சில ஐஸ் கட்டிகள் மற்றும் நறுக்கிய புதினா இலைகளைச் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
#3
மல்லிகை லஸ்ஸி
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் புதிய மல்லிகைப் பூக்கள், கெட்டியான தயிர், தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி மற்றும் சிறிதளவு குளிர்ந்த நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். மல்லிகையின் நறுமணம் தயிருடன் நன்றாக ஒன்றிணையும் வகையில், மிக்ஸியைப் பயன்படுத்தி நுரை வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். தயார் செய்த இந்தக் கலவையை ஒரு வடிகட்டி மூலம் ஜாடியில் ஊற்றிக் கொள்ளவும். இதில் ஐஸ் கட்டிகள் மற்றும் நறுக்கிய புதினா இலைகளைச் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
#4
கேவ்டா சர்பத்
முதலில் ஒரு பாத்திரத்தில் (Pan) தேவையான அளவு நீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை கொதிக்க விடவும். பாகு தயாரானதும், அதில் சில துளிகள் கேவ்டா எசன்ஸ் (Kewra water/oil) சேர்த்து மென்மையாகக் கிளறி, உடனடியாக அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையுடன் புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து, அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்து நன்கு குளிர்விக்கவும். பானம் நன்கு குளிர்ந்ததும், அதனை ஒரு கண்ணாடி குவளையில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.
#5
மூலிகை க்ரீன் டீ கூலர்
முதலில் க்ரீன் டீ பேக்குகளைச் (Green tea bags) சுடுநீரில் இட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை அதன் சாறு நன்கு இறங்கும் வரை ஊறவிடவும். தேநீர் தயார் நிலையில் இருக்கும்போதே, அதில் சில புதினா இலைகள் மற்றும் துளசி இலைகளைச் சேர்த்து, அதன் மருத்துவ குணங்கள் தேநீருடன் ஒன்றிணையுமாறு சிறிது நேரம் குளிர வைக்கவும். ஒரு ஜாடியில் தேவையான அளவு ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, அதில் தயார் செய்து வைத்துள்ள மூலிகை க்ரீன் டீ கலவை, புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை சாறு மற்றும் சோடா ஆகியவற்றைச் சேர்த்து மென்மையாகக் கலக்கவும். சுவையும் ஆரோக்கியமும் ஒருங்கே நிறைந்த இந்த மூலிகை க்ரீன் டீ கூலரை உடனடியாகப் பரிமாறி, கோடையின் புத்துணர்ச்சியை அனுபவியுங்கள்.