இஞ்சி, பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதா கெட்டதா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
தேநீர் முதல் சமையல் வரை எல்லாவற்றிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் இஞ்சி மற்றும் பூண்டு அதிகம் உட்கொள்ளப்படுகிறது. இஞ்சி, பூண்டு விரைவில் கெட்டுப் போகாததால், பலரும் ஒரே நேரத்தில் அவற்றை அதிக அளவில் வாங்கிச் சேமித்து வைக்கின்றனர். சிலர் மற்ற காய்கறிகளுடன் இஞ்சி, பூண்டு போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பதும் வாடிக்கையான உள்ளது. இஞ்சி, பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பது சரியா இல்லையா, இஞ்சி, பூண்டு கெட்டுப்போகாமல் தடுப்பது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
இஞ்சி அழுக ஆரம்பிக்கும்
இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்க மற்றும் கெட்டுப்போகாமல் இருக்க இஞ்சியை கழுவி உலர்த்தி காற்று புகாத டப்பாவில் போட்டு பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். நீண்ட நேரம் திறந்திருந்தால் இஞ்சி காய்ந்துவிடும். சிலர் ஈரமான இஞ்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், இஞ்சி அழுக ஆரம்பிக்கும். இஞ்சியை சேமிப்பதற்கான சிறந்த வழி, முதலில் அதை நன்கு கழுவ வேண்டும். இப்போது இஞ்சி தண்ணீரை உலர விடவும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பெட்டியில் காகிதத்தை வைத்து, பின்னர் இஞ்சியை வைக்கவும். இதனால் இஞ்சி மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும்.
பூண்டை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது
பூண்டை பொதுவாக ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதல்ல. பூண்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ரப்பராக மாறும். மேலும், பூண்டை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதால், அதில் பூஞ்சை பாதிப்பு உருவாகும். பூண்டை காய்கறிகளுடன் சேர்த்து வைத்தால், மற்ற காய்கறிகளில் பூண்டு வாசனையை உண்டாக்கும். ஒருபோதும் பூண்டை உரித்து குளிர்சாதன பெட்டியில் திறந்து வைக்க வேண்டாம். இதனால் ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் அனைத்து பொருட்களுக்கு பூண்டு வாசனை வரும். தோலுரித்த பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைக்க விரும்பினால், காற்று புகாத பெட்டியில் போட்டி மூடி வைக்கவும். பூண்டை நீண்ட நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் முளைகட்ட ஆரம்பித்துவிடும். பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து சேமித்து வைப்பது நல்லது.
இஞ்சி மற்றும் பூண்டை ஃப்ரிட்ஜ் இல்லாமல் நீண்ட காலத்திற்கு சேமிப்பது எப்படி?
குளிர்சாதன பெட்டி இல்லாமல் குளிர்காலத்தில் பூண்டு மற்றும் இஞ்சியை எளிதாக சேமிக்கலாம். பூண்டைத் திறந்த வெளியில் வைத்தால் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அதேபோல் இஞ்சியையும் திறந்த வெளியிலும், காற்றோட்டமான இடத்திலும் வைத்திருந்தால் 1 மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். அதே நேரம், சில சமயங்களில் திறந்த இடங்களில் இஞ்சியை நீண்ட நேரம் வைத்திருந்தால் காய்ந்துவிடும். இதனை அரைத்து உபயோகிக்கலாம்.