LOADING...
தீபாவளி 2025: எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள் இதுதான்
எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள்

தீபாவளி 2025: எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2025
05:48 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்டோபர் 20), ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், இறைவனை வழிபடுவதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீபாவளி தினத்தில் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்வது மிகவும் உகந்த நேரமாகக் கருதப்படுகிறது. அன்று அதிகாலையில் சுடுநீரில் கங்கா தேவி வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளதால், நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் தேய்த்துச் சுடுநீரில் நீராடினால் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருளைப் பெற நல்லெண்ணெய் குளியல் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இறைவழிபாடு

இறைவழிபாட்டிற்கான நேரம்

குளியலுக்குப் பிறகு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இறைவழிபாடு செய்யச் சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் வழிபாட்டில் ஈடுபட முடியாதவர்கள், காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை பூஜைகளைச் செய்யலாம். பூஜையின்போது, வீட்டிலுள்ள இறைவனுக்குப் பூக்களால் அலங்காரம் செய்து, புது ஆடைகள் மற்றும் இனிப்புப் பலகாரங்களைப் படைக்க வேண்டும். மேலும், வீட்டில் எத்தனை அகல் விளக்குகளை ஏற்ற முடியுமோ, அத்தனை விளக்குகளை ஏற்றி, அந்த ஒளியில் இறைவனை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. வழிபாட்டை முடித்த பின்னர், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுவது பாரம்பரிய வழக்கமாகும்.