
தினமும் சீஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள்: ஒரு விரிவான பார்வை
செய்தி முன்னோட்டம்
உணவில் சுவையைக் கூட்டும் சீஸ் தினமும் சாப்பிடுவதற்கு ஏற்றதா என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. எந்த வகை சீஸை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து, தினமும் சீஸ் சாப்பிடுவது நன்மை மற்றும் தீமை என இரண்டு விளைவுகளையும் ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சீஸ் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. சீஸில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. தினமும் பால் பொருட்கள் மூலமாக கால்சியம் எடுத்துக்கொள்வது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சீஸில் அதிக புரதம் இருப்பதால், தசைகளை வலுப்படுத்துவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.
குடல் ஆரோக்கியம்
குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சீஸ்
ஃபெட்டா மற்றும் ஆட்டு சீஸ் போன்ற சில வகைகள், குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் புரோபயாடிக்குகளை கொண்டுள்ளன. இருப்பினும், தினமும் சீஸ் சாப்பிடுவதால் சில பாதகமான விளைவுகளும் ஏற்படலாம். பல வகையான சீஸ்களில் கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு (saturated fats) அதிகமாக உள்ளன. இவற்றை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும், மேலும், இதய நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். எனவே, குறைந்த கொழுப்புள்ள பார்ட்-ஸ்கிம் மொஸரெல்லா அல்லது காட்டேஜ் சீஸ் போன்ற வகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்குச் சீஸ் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இதற்கு, லாக்டோஸ் இல்லாத சீஸ் வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.