புரட்டாசி ஸ்பெஷல் சமையல் குறிப்பு: செட்டிநாடு சீயம் செய்முறை
செட்டிநாடு பகுதிகளின் ஸ்பெஷல் ரெசிபிகளில் ஒன்று சீயம். இதில் இனிப்பு சீயம் மற்றும் மசாலா சீயம் என இரண்டு வகைகள் உண்டு. அதேபோல, சுழியனுக்கும், சீயத்திற்கும் வித்தியாசம் உண்டு. சுழியனுக்கும், சீயத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், சுழியனுக்கு மைதா மாவு தோய்த்து செய்யவேண்டும். ஆனால் சீயத்துக்கு நாம் வீட்டிலிருக்கும் இட்லி தோசை மாவு அல்லது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபியான ஃப்ரெஷ் மாவு கொண்டு செய்யப்படுவது. இனிப்பு சீயம் மற்றும் மசாலா சீயம் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
பூரணம் செய்ய: 1/2 கப் கடலை பருப்பு பருப்பு வேக வைக்க 3/4 கப் தண்ணீர் 1/2 கப் வெல்லம் பாகு எடுக்க 1/4 கப் தண்ணீர் 1/3 கப் தேங்காய் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சீயம் மாவு செய்ய: 1/2 கப் பச்சை அரிசி 1/2 கப் உளுத்தம் பருப்பு தேவையான தண்ணீர் ருசிக்கேற்ப உப்பு
செய்முறை
உளுத்தம்பருப்பு மற்றும் பச்சரிசியை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாகக் கழுவி, மிக்சியில், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கெட்டியான வழுவழுப்பான மாவாக அரைக்கவும். அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம், மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தேவையான உப்பு சேர்த்து,தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். மறுபுறம், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து, முழுவதுமாக உருகும் வரை சூடாக்கவும். வெல்லம் உருகியதும் அணைத்து ஆற வைக்கவும். ஒரு அடுப்பில், கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 6 விசில் வரை வேக வைக்கவும். பின்னர் பருப்பை நன்றாக மசித்துக்கொள்ளவும்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில், வெல்லத்தை, தண்ணீருடன் சேர்த்து, முழுவதுமாக உருகும் வரை சூடாக்கவும். வெல்லம் உருகியதும் அணைத்து ஆற வைக்கவும். ஒரு அடுப்பில், கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 6 விசில் வரை வேக வைக்கவும். பின்னர் பருப்பை நன்றாக மசித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, தேங்காய் சேர்த்து 2-நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறவும். இதனுடன், வெல்லப்பாகை வடிகட்டி சேர்க்கவும். இந்த கலவை கெட்டியாகும் வரை கிளறவும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்.
செய்முறை
இந்த பூரண கலவையை, ஆறியவுடன், சிறிய உருண்டைகளாக செய்து தயாராக ஒரு தட்டில் வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, தயாராகவுள்ள பச்சரிசி மாவில், இந்த உருண்டைகளை தோய்த்து, பொன்னிறமாக வறுக்கவும். சூடான, சுவையான, செட்டிநாடு சீயம் தயார். இதே பச்சரிசி மாவில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய் போன்றவற்றை கடுகுடன் தாளித்து, சேர்த்து, எண்ணையில் பொரித்து எடுத்தால், மசாலா சீயம் தயார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்