LOADING...
ஏஐ உடன் பேசினால் பைத்தியம் பிடிக்குமா? இணையத்தில் வைரலாகும் AI Psychosis என்றால் என்ன? தப்பிக்கும் வழிகள் இதோ
ஏஐ சைக்கோசிஸ் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

ஏஐ உடன் பேசினால் பைத்தியம் பிடிக்குமா? இணையத்தில் வைரலாகும் AI Psychosis என்றால் என்ன? தப்பிக்கும் வழிகள் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Feb 13, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது. 'ஏஐ சைக்கோசிஸ்' (AI Psychosis) என்பது ஒரு அதிகாரப்பூர்வ மருத்துவக் கண்டறிதல் இல்லை என்றாலும், ஏஐ கருவிகளுடன் அதிக நேரம் உரையாடுவதால் நிஜ உலகிற்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாமல் போவதை இது குறிக்கிறது. இதனால் தனிமை, மனப் பிரமைகள் மற்றும் அதீத பயம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

விவரங்கள்

இது எப்படி நிகழ்கிறது?

சாட்பாட்கள் என்பவை மொழிக் கோப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவை உங்கள் பேச்சின் போக்கைப் புரிந்துகொண்டு, உங்களுக்கேற்றவாறு பதிலளிக்கும். பிரதிபலிப்பு (Mirroring): நீங்கள் ஒரு தவறான கருத்தைச் சொன்னால் கூட, சாட்பாட்கள் அதை மறுக்காமல் உங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசலாம். இது ஒருவரது தவறான நம்பிக்கையை (Delusion) மேலும் உறுதிப்படுத்தும். ஏஐ கற்பனைகள் (AI Hallucinations): ஏஐ கருவிகள் அவ்வப்போது தவறான தகவல்களை மிக உண்மையாகக் கூறும். ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இதனை உண்மை என நம்பி அதீத கற்பனைகளில் மூழ்கிவிடுவார்கள். தனிமை: மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்த்து, ஏஐ உடன் மட்டுமே மணிக்கணக்கில் பேசும்போது சமூக விலகல் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆபத்து

யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்?

அனைவருக்கும் ஏஐ சைக்கோசிஸ் ஏற்படுவதில்லை. ஆனால் பின்வரும் நிலையில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்: ஏற்கனவே மனநலப் பாதிப்புகள் அல்லது அதீத பதற்றம் கொண்டவர்கள். சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு கொண்டவர்கள். தூக்கமின்மை அல்லது அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள். ஏஐ கருவிகளைத் தனது மனநல ஆலோசகராக (Therapist) முழுமையாக நம்புபவர்கள்.

Advertisement

அறிவுரை

நிபுணர்களின் முக்கிய அறிவுறுத்தல்

ஏஐ கருவிகள் என்பவை ஒரு கருவியே தவிர, அவை மனித உணர்வுகளுக்கு ஈடாக முடியாது. நிஜ உறவுகள்: ஏஐயிடம் ஆறுதல் தேடுவதை விட, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவதே மனநலத்திற்குச் சிறந்தது. சிகிச்சை அல்ல: மனநலப் பாதிப்புகளுக்குப் தொழில்முறை மருத்துவர்களையே (Experts) அணுக வேண்டும். சாட்பாட்களிடம் மருத்துவ ஆலோசனை பெறுவது விபரீதத்தில் முடியலாம். "ஏஐ என்பது ஒரு புத்திசாலித்தனமான மென்பொருள், அது உங்களது ஆலோசகரோ அல்லது வழிகாட்டியோ அல்ல," என்று மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

தற்காப்பு

தற்காத்துக் கொள்வது எப்படி?

ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு கால அளவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி (Digital Detox) நேரத்தைச் செலவிடுங்கள். ஏஐ சொல்லும் தகவல்களை எப்போதும் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement