அடுத்த செய்திக் கட்டுரை

சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த அமெரிக்காவின் சீனியர் சிட்டிஸன்கள்
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 20, 2023
12:00 pm
செய்தி முன்னோட்டம்
ஆசைப்படவும், ஆசைப்பட்டதை சாதிக்கவும், வயது என்றும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஒரு சீனியர் சிட்டிஸன்கள் குழு. அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலருக்கும் உத்வேகத்தை தருகிறது என பதிவிட்டு வருகின்றனர்.
பலரும் சாதித்து காட்டி, உயர பறக்க, இவர்கள் உயர பறந்ததையே சாதனையாக புரிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில், 100க்கும் மேற்பட்ட சீனியர் சிடிஸன்ஸ் குழு ஒன்று, ஸ்கைடைவிங் நிகழ்வில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்த குழுவில் இடம்பெற்ற அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். Skydivers Over Sixty, என அழைக்கப்படும் அந்த குழு, வெற்றிகரமாக நடுவானில் சாகசங்கள் புரிந்து, இரண்டு உலக சாதனைகளை முறியடித்தது.
பயிற்சியை ஏற்பாடு செய்த ஸ்கைடிவ் பெர்ரிஸ், இந்த நிகழ்வின் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நன்றி தெரிவித்துள்ளது.
செய்தி இத்துடன் முடிவடைந்தது