LOADING...
காரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு 
காரத்தில் இத்தனை வகைகளா?

காரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மத்தியில், இந்திய உணவுகள் பிரபலமாகி வருகிறது. எப்போதும், பிரட், அரைவேக்காட்டில் வேக வைத்த உணவுகளையே உண்பவர்களுக்கு, நம்மூர் ருசியான உணவுகள் பிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதுமட்டுமின்றி, இந்திய உணவுகள் ஆரோக்கியத்தன்மையும் நிறைந்துள்ளதால், பலராலும் விரும்பப்படுகிறது. எனினும், அவர்களால், இந்திய உணவுகளில் காரத்தை மட்டும் தான் பழகிக்கொள்ள முடியவில்லை. அதனால், மேலை நாடுகளில் இயங்கி வரும் இந்திய உணவு வகைகளில், அவர்களுக்கு ஏற்றவாறு, காரம் குறைவாகவே சமைக்கப்படுகிறது. அதிலும், ஒரு குறிப்பிட்ட உணவகம், நேயர் விருப்பத்திற்கு ஏற்ப, உணவுகளில் இந்திய காரம், அமெரிக்கா காரம் என காரத்தின் அளவை மாற்றி தருவோம் என தங்களது மெனு கார்டில் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

embed

எந்த ஊர் காரம் வேண்டும்?

I just tried to order Indian food in Bethesda and this is hilarious: pic.twitter.com/H6EccABzcy— Aditi Shekar (@aditishekar) April 8, 2023