LOADING...
மேரியம் அகராதியில் இணைந்த 'பீஸ்ட் மோட்', TTYL உள்ளிட்ட 700 புது வார்த்தைகள்
மேரியம் அகராதியில் இணைந்த 'பீஸ்ட் மோட்', TTYL உள்ளிட்ட 700 புது வார்த்தைகள்

மேரியம் அகராதியில் இணைந்த 'பீஸ்ட் மோட்', TTYL உள்ளிட்ட 700 புது வார்த்தைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2023
05:15 pm

செய்தி முன்னோட்டம்

ஆங்கிலத்தின் பிரபலமான அகராதியான Merriam-Webster Dictionary அவ்வப்போது, புதிய ஆங்கில வார்த்தைகளை, தன்னுடைய அகராதியில் இணைப்பதுண்டு. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்னர், 690 புதிய சொற்களை அகராதியில் சேர்த்துள்ளது. அவற்றில் பல, தற்போதுள்ள இளைஞர்களின் செல்மொழி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள இளம்தலைமுறையினரை, Gen Z எனக்குறிப்பிடுவதுண்டு. அவர்களிடத்தில் பிரபலமான, வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம்-இல் பயன்படுத்தக்கூடிய வார்தைகளான 'Thirst Trap' (கவனத்தை கோரும் போக்கு) , பீஸ்ட் மோட் (அதிக ஆக்ரோஷமான அல்லது சுறுசுறுப்பான பாணி), TTYL (Talk To You Later), 'பின்னர் விளிக்கிறேன்' போன்ற புது வார்த்தைகளை இணைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போன்ற பல வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

embed

அகராதியில் இணைந்த 'பீஸ்ட் மோட்'

New words, who dis? https://t.co/scqy5JG1hQ— Merriam-Webster (@MerriamWebster) September 28, 2023