Page Loader
தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 
தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்

தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 

எழுதியவர் Nivetha P
May 09, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் அருகே மருதூர் வட்டம் பகுதியின் அருகேயுள்ள வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார். திருநாகேஸ்வர பகுதியினை சேர்ந்தவர் மோகன், இவருடைய மகன் தமிழ்வளவன்(28). இவர் வில்லிய வரம்பல் மகா மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்து வரும் திருவிழாவினை காண அந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த கோயில் திருவிழாவில் நேற்று(மே.,8) இரவு அம்மன் புறப்பாடு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின் போது வான வேடிக்கையும் நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

கோயில் 

சிற்பத்தின் மீது ஏறியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் 

இந்நிலையில் அந்த வான வேடிக்கையினை பார்ப்பதற்காக கோயிலின் மேல் பகுதியில் உள்ள கோபுரம் அருகே செல்ல கோயில் சுற்றுச்சுவர் பகுதியிலிருந்த சிங்க சிற்பத்தின் மீது தமிழ்வளவன் ஏறியுள்ளார். அப்போது அந்த சிற்பம் உடைந்த நிலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தமிழ்வளவனை அருகில் இருந்தோர் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்கள். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்கள். தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்த நாச்சியார் கோயில் ஆய்வாளர் கே.ரேகா ராணி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.