தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ், இவர் பொறியியல் படித்துள்ளார். எனினும் விவசாயம் மீது அதீத விருப்பம் கொண்டவர். மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற நெல் ரகங்களை பயிரிட அவர் நிலத்தை தற்போது தயார் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் பாரம்பரிய நெல் விதை விவசாயம் குறித்து பேசுகையில், தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறந்து விட்டோம். ஆனால் நம் முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு தான் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாஸ்த்துள்ளார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த ரக நெல் விதைகளை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்ய வேண்டும். சரியான முறையில் இதனை செய்தால் நிச்சயம் லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தார்.
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்
இதனை தொடர்ந்து இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் தன்னை தொடர்பு கொண்டால் இலவசமாகவே விதை நெல் தர தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தன்னால் இயன்றதை அவர் செய்து வருவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடவேண்டியவை. மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை அதிகரிப்பதோடு, நரம்புகளும் வலுப்பெறும். குறிப்பாக வளரும் ஆண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை சம்பா மிகவும் ஏற்றதாகும். இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கக்கூடியது என்று கூறினார். இதனையடுத்து, பூங்கார் அரிசி கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் அளிக்கக்கூடியது என்றும் அவர் இந்த ரக அரிசிகளின் நன்மைகளை எடுத்துரைத்தார்.