Page Loader
உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி 
உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி

உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி 

எழுதியவர் Nivetha P
May 12, 2023
06:22 pm

செய்தி முன்னோட்டம்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் தினமான இன்று(மே.,12)உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் செவிலியர்கள் இந்த தினத்தை கொண்டாடிவருவதோடு, சில இடங்களில் மெழுகுவர்த்தியினை ஏந்தி உறுதிமொழியும் எடுத்து கொண்டுள்ளார்கள். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நினைவு பரிசுகளும், கேடையங்களும் வழங்கப்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்ததோடு, கேக் வெட்டியும் கொண்டாடினர். இதற்கிடையே உலக செவிலியர் தினத்தினையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து பதிவில், அன்பும், அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளை கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர் தினம் வாழ்த்துக்கள். காயமாற்றும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற நமது அரசு செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post