நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவகை இருந்தாலும் சூடான பிரியாணி தான் பலரது விருப்பமான உணவாக இருந்து வருகிறது.
அதுவும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்முறை வந்த பின்னர், வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிடுவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாளை(ஜூலை.,2)சர்வதேச பிரியாணி தினம் கொண்டாடப்படவுள்ளது.
அதன்படி உணவு டெலிவரிசெய்யும் ஸ்விகி நிறுவனம் இந்திய மக்கள் தங்கள் தளத்தில் பிரியாணியினை ஆர்டர் செய்தது குறித்து கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தியுள்ளது.
இதில் பிரியாணி தான் விருப்பமான உணவுப்பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 15ம்தேதி வரை தங்கள் தளத்தில் பிரியாணிக்கான ஆர்டர் 8.26%அதிகரித்துள்ளது என்றும்,கடந்த 2022ம்ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பிரியாணி ஆர்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியாணி
ஒரே ஆர்டரில் ரூ.31,532க்கு பிரியாணியினை ஆர்டர் செய்த சென்னை வாசி
மேலும் இந்த கணக்கீட்டின்படி, பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை குறித்து பார்த்தால், ஹைதராபாத்தில் உள்ள ஸ்விகி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்கள் அதிகம் பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளது.
அடுத்த இடத்தில் பெங்களூர் 5 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.
சென்னை 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை செய்து 3ம்இடத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 85வகை பிரியாணியுடன், 35மில்லியன் ஆர்டர்களை பெற்று ஹைதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது.
பிரியாணி வழங்கும் உணவகங்களில் பெங்களூர் 24,000உணவகங்களை கொண்டுள்ளது,அடுத்து மும்பை 22,000 உணவகங்களும், டெல்லி 20,000உணவகங்களும் கொண்டு அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.
இதனிடையே சென்னையிலுள்ள ஒருவர் ஸ்விகியில் தனது ஒரே ஆர்டரில் ரூ.31,532க்கு பிரியாணியினை ஆர்டர் செய்து பிரியாணிமீதான தனது தீராத காதலினை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.