Page Loader
ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
மாயமான சுபஸ்ரீ சடலமாக மீட்பு

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!

எழுதியவர் Sindhuja SM
Jan 03, 2023
05:26 pm

செய்தி முன்னோட்டம்

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். திருப்பூர் அவிநாசியை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(34), ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சுபஸ்ரீ, ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி ஒரு வார யோகா பயிற்சிக்கு சென்ற இவர், 18ஆம் தேதிக்கு பின்னும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதை போலீஸார் 6 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

மர்மம்

சுபஸ்ரீக்கு என்ன நடந்தது?

சிசிடிவி கேமராவில், கையில் கொண்டு போன பைகள், மொபைல் எதுவுமே இல்லாமல் சுபஸ்ரீ ஒரு வெள்ளை உடையில் எங்கோ ஓடி கொண்டிருப்பது தெரிய வந்தது. 18ஆம் தேதி கணவர் பழனிகுமாருக்கு சில புதிய தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதை அவரால் எடுக்க முடியவில்லை. சுபஸ்ரீ தான் வெவ்வேறு ஆட்களிடம் இருந்து மொபைலை வாங்கி தன் கணவரிடம் பேச முயற்சித்திருக்கிறார் என்கிறது காவல்துறை. சுபஸ்ரீ ஒரு காரில் லிப்ட் கேட்டு செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கி இருக்கிறார். இதனையடுத்து, 2 வாரங்களுக்கு பின், அவரது உடல் செம்மேடு அருகே உள்ள காந்தி நகர் கிணற்றில் கண்டெக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈஷா மையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.