அடுத்த செய்திக் கட்டுரை

தன் பெற்றோருக்கு பெரியளவு உருவப்படத்தை பரிசளித்த இளம்பெண் - வைரல் வீடியோ
எழுதியவர்
Nivetha P
Feb 24, 2023
03:32 pm
செய்தி முன்னோட்டம்
இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருக்கு மிகபெரியளவிலான ஓர் பரிசினையளித்து அவர்களை ஆச்சர்யமடைய வைத்த நிகழ்வு ஒன்று தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது வீட்டுவாசலில் ஓர் பெரிய பரிசுபொருளினை வைத்து அதனை பிரிக்க முயற்சிக்கிறார்.
அந்த வீடியோ கிளிப்பில் 'என் உலகம் எப்படி உள்ளது என்பதை என் பெற்றோருக்கு காட்ட முடிவுசெய்தேன்' என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் சிறப்பு என்னவென்றால் அப்பெண் பிரித்துக்கொண்டிருக்கும் அந்த பெரியப்பரிசுபொருள் தங்களுக்கு தான் என்பது அந்த பெற்றோருக்கு தெரியாது.
தனது மகளுக்கு உதவ அவரது தந்தை தாமாக முன்வந்து,அந்த பொருளை பிரிக்கிறார்.
அதில் அவர்களது புகைப்படம் இருப்பதை கண்டதும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
தனது மகளுக்கு அந்த தந்தை முத்தத்தை பரிசாக அளிக்கிறார்.
Instagram அஞ்சல்