LOADING...
சொத்துரிமை சட்டம்: பெண்கள் ஏன் உயில் எழுத வேண்டும்? அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
பெண்கள் சொத்துரிமை சட்டம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை

சொத்துரிமை சட்டம்: பெண்கள் ஏன் உயில் எழுத வேண்டும்? அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
06:28 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து இந்துப் பெண்களும், வயது வரம்பின்றி, கட்டாயம் ஒரு உயிலை எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரை, சொத்துரிமை மற்றும் வாரிசுரிமை தொடர்பானப் பிரச்சினைகளில் பெண்களின் சொத்துக்கள் பாதுகாப்படுவதை உறுதி செய்வதற்கான மிக முக்கிய நடவடிக்கையாகும். உயில் எழுதுவது அனைவருக்கும் முக்கியம் என்றாலும், இந்துப் பெண்களுக்கு இது மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956இன் பிரிவு 15இன் கீழ், ஒரு பெண் உயில் எழுதாமல் இறக்கும்போது அவரது சொத்துக்கள் எவ்வாறு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டமே வரையறுக்கிறது.

சட்டம்

சட்டம் சொல்வது என்ன?

சட்டத்தின்படி, குழந்தை இல்லாத ஒரு விதவை உயில் எழுதாமல் இறக்கும்போது, ​​அவர் தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்துக்களைத் தவிர, அவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் கூட, அவரின் கணவரின் வாரிசுகளுக்கு சென்றுவிடும். அப்பெண்ணுக்குப் பிறந்த வீட்டில் உள்ள பெற்றோருக்கோ அல்லதுச் சகோதரர்/சகோதரிகளுக்கோ அந்தச் சொத்தில் உரிமை இல்லாமல் போகிறது. உயில் எழுதாமல் ஒரு இந்துப் பெண் இறந்தால், அவரதுச் சொத்துக்கள் சில வரிசைகளின் அடிப்படையில் வாரிசுகளுக்குச் செல்லும். முதலில், மகன், மகள் மற்றும் கணவருக்குச் சொத்துக்கள் செல்லும். அவர்களுக்குப் பிறகு, கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும். அதன்பிறகு தான் தாய் மற்றும் தந்தைக்குப் பங்குகள் கிடைக்கும். அதற்குப் பிறகே தந்தையின் வாரிசுகளுக்கும், இறுதியாகத் தாயின் வாரிசுகளுக்கும் அந்தச் சொத்துக்கள் செல்லும்.

தகராறு

சொத்துத் தகராறு

இதன் பொருள், ஒரு பெண் தனதுப் பெற்றோரின் இறுதி நாட்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், அவர் உயில் எழுதாமல் இறக்கும்போது, அவருடையச் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்கள் கூட அவரதுக் கணவரின் வாரிசுகளுக்குச் சென்று, அவரதுப் பெற்றோரின் உரிமையைக் கேள்விக்குறியாக்கலாம். இது, இறந்துபோன பெண்ணின் பிறந்த குடும்பத்திற்கும், புகுந்த வீட்டுக் குடும்பத்திற்கும் இடையே சொத்துத் தகராறுகளுக்கு வழிவகுக்கும். உயில் எழுதுவதன் மூலம், ஒரு பெண் தான் விரும்பும் பயனாளிகளுக்கு தனது சொத்துக்களை விநியோகிக்க முடியும்.

Advertisement

உயில்

உயிலில் என்னென்ன சேர்க்கலாம்?

வயது அல்லது சொத்தின் அளவு எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணும் உயில் எழுதுவது மிகவும் முக்கியம். குறிப்பாகத் திருமணமான அல்லதுத் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள், தங்கள் சீதனம் (திருமணத்திற்கு முன்னும் பின்னும் அன்பளிப்பாகப் பெற்ற அசையும் அல்லது அசையாச் சொத்துக்கள்) போன்றவற்றைத் தனிப்பட்ட முறையில் உயிலில் பதிவு செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலமே, அவர்களின் சொத்துக்களை அவர்கள் விரும்பியவர்களுக்குச் சேர்ப்பதை உறுதி செய்ய முடியும்.

Advertisement