தேமுதிகவின் அடுத்த தலைவர் பிரேமலதா விஜயகாந்த்; அவரை பற்றி சிறு பார்வை
செய்தி முன்னோட்டம்
கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு, அவர் தோற்றுவித்த தேமுதிகவை வழிநடத்த போவது, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்.
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பிரேமலதாவை அதிகாரபூர்வமாக பொதுச்செயலாளராக அறிவித்தார் விஜயகாந்த்.
தற்போது கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் கவனித்து வரும் பிரேமலதா, தனது கணவரை 'கேப்டன்' என்றே அழைக்கிறார்.
இனி, கட்சியை முன்னின்று வழிநடத்தப்போகும் அவரை பற்றி சிறு பார்வை.
card 2
ரசிகை பிரேமலதா டூ திருமதி.பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா, 1969-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி பிறந்தவர். இவர் இளங்கலை ஆங்கிலப்பட்டப் படிப்பு படித்துள்ளார்.
நடிகராக விஜயகாந்த்தின் தீவிர ரசிகையாக இருந்த பிரேமலதா, அவரையே திருமணம் செய்து கொண்டது ஆச்சரியம்.
1990-ம் ஆண்டு ஜனவரி மாதம், கலைஞர் கருணாநிதி முன்னிலையில் மதுரையில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி தான் முன் நின்று நடத்தி வைத்தார்.
விஜயகாந்தின் கொடை பண்பையும், விருதோம்பல் பண்பையும் பற்றி கூறுபவர்கள், பிரேமலதாவையும் போற்ற தவறுவதில்லை.
அவர் கேட்கும்போதெல்லாம் அவரின் நன்கொடைக்கு நிதியை ஏற்பாடு செய்வது பிரேமலதா தான் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்
card 3
அரசியல் பிரவேசம்
இல்லத்தரசியாக மட்டுமின்றி அப்போதே ரசிகர் மன்ற நிர்வாகம் மற்றும் விஜயகாந்துக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார் பிரேமலதா.
2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி, விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை விஜயகாந்த் தொடங்கியதும், அதில் தன்னை இணைத்து கொண்டு, கட்சியை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார் பிரேமலதா.
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த பிரேமலதா, விஜயகாந்த் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட பிறகு, 2018-ம் ஆண்டு முதல் தேமுதிக-வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
விஜயகாந்த் சார்பாக கட்சியை வழிநடத்திய பிரேமலதா, இனி கட்சியின் தலைவராகவும், பொது செயலாளராகவும் இனி தொடர்வார்.