இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு
இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வர் பதவியில் யார் அமரபோகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த நவ. 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும்பான்மையில் வெற்றி அடைந்தது. இந்நிலையில், வெற்றிபெற்றவர்களில் பலரும் முதல்வர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வரப்போவது யார்?
இந்த முதல்வர் பதவிக்கு சுக்விந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி, பிரதீபா சிங் ஆகிய மூவரின் பெயர்கள் தான் அடிபடுகிறது. இந்த மூன்று எம்எல்ஏக்களும் யார் தெரியுமா? 1. சுக்விந்தர் சிங் சுகு- கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் பிரசாரக் குழுத் தலைவர். 3 முறை எம்எல்ஏவாக வென்றவர். 2. முகேஷ் அக்னிஹோத்ரி- 4 முறை எம்எல்ஏவாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். 3. பிரதீபா சிங்- இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரான வீரபத்ர சிங்கின் மனைவி. இமாச்சல் காங்கிரஸ் தலைவர். பாஜகவின் ராம் ஸ்வரூப் சர்மா மறைவுக்குப் பின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதில் யார் இமாச்சலை ஆட்சி செய்ய போகிறார் என்பதை இன்று சிம்லாவில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்போகிறார்கள்.