இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்!
ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இது 'இளைய தலைமுறையினரின் பிரச்சனை' எவ்வளவு ஆழமானது என்பதைப் பற்றி பேசும் ஒரு விடியோவாகும். தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இந்திய பணக்காரர்களில் ஒருவராவார். இவர் பகிர்ந்த இந்த டிக்டாக் வீடியோவில், சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன்களால் இளைய தலைமுறையினர் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை பற்றி கூறப்பட்டிருந்தது. "டோபமைன் தரும் பிற செயல்களுக்கு வயது வரம்புகள் இருக்கிறது. ஆனால், செல்போனுக்கு அப்படி எதுவும் இல்லை. இதனால், செல்போனை உபயோகிக்கும் இளம் தலைமுறையினர் தங்கள் மன அழுத்தத்தைச் சமாளிக்க ஆரோக்கியமான வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக சமூக வலைதளங்களையே நாடுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.