LOADING...
2 வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றால் வெற்றியாளர் யார்? தேர்தல் ஆணையத்தின் விதிகள் இதோ!
வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றால் வெற்றியாளர் யார்? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்.

2 வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றால் வெற்றியாளர் யார்? தேர்தல் ஆணையத்தின் விதிகள் இதோ!

எழுதியவர் Vasuki
May 03, 2026
07:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், ஒரு தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள் மிகச் சரியாக ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால் (Tie), வெற்றியாளரை எப்படித் தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுவதால், பல தொகுதிகளில் கடும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

என்ன சொல்கிறது சட்டம்

சமமான வாக்குகள்

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே அளவிலான வாக்குகளைப் பெற்றால், வெற்றியாளரைத் தீர்மானிக்கப் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102 -ன் கீழ், இரண்டு வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றால், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் (Lots) நடத்தப்படும். குலுக்கலில் யாருடைய பெயர் வருகிறதோ, அவர் ஒரு கூடுதல் வாக்கை (one additional vote) பெற்றதாகக் கருதப்படுவார். இதன் அடிப்படையில் அவரே அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். தேர்தல் அதிகாரி முன்னிலையில் சில நேரங்களில் மீண்டும் வாக்குகள் சரிபார்க்கப்படும்; அப்போதும் சமநிலை நீடித்தால் குலுக்கல் முறையே இறுதியானது.

3 வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றால்

முந்தைய நிகழ்வுகள்

இத்தகைய நிகழ்வுகள் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் இதுவரை நடந்தது இல்லை என்றாலும், இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்றுள்ளன. 2017ல் மும்பை மாநகராட்சித் தேர்தலின் போது சமமான வாக்குகள் பதிவானதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ல் அசாம் உள்ளாட்சித் தேர்தலிலும் வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றபோது குலுக்கல் நடைமுறை பின்பற்றப்பட்டது. மூன்று வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றாலும் இதே குலுக்கல் முறையே பின்பற்றப்படும். சட்டமன்றத் தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தகைய சமநிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாளை காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும்போது, இத்தகைய சுவாரஸ்யமான சூழல் ஏற்படுமா என்பது தெரிந்துவிடும்.

Advertisement