துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பளிச் பதில்!
தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என சமூக ஊடகங்களில் காலை முதல் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதற்காக மூத்த அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து மாலை அறிவிப்பு வெளியாகும் எனவும் யூகிக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்கப் போவதாக வெளியான செய்திகளை வதந்திகள் என்று மறுத்துள்ளார். மேலும் அவர்,"நீங்கள் முதல்வரிடம் (முதலமைச்சரிடம்) கேட்க வேண்டும். இது குறித்து முடிவெடுப்பது முற்றிலும் முதல்வரின் (முதல்வர்) உரிமை" என்றார். மேலும், 'எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் உள்ளோம். எந்த முடிவாக இருந்தாலும் அவர்தான் (முதலமைச்சர்) தான் எடுப்பார்" என்றார்.
Twitter Post
முதல்வரும், அமைச்சர்களும் சூசகமாக உணர்த்தினர்
முன்னதாக, அமெரிக்க பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் பதவிக்கு உயர்த்துவது குறித்து மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்தார். மாற்றம் ஒன்றே நிலையானது என்றும் மக்கள் எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும் என்றும் அவர் கூறினார். அதன் பின்னர் நடைபெற்ற போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "கல்வியும் மருத்துவமும் இரு கண்கள் போன்றது என்று கூறிய முதல்வர், கல்வியை மிகவும் போற்றுகிறார். திறன் மேம்பாடு என்ற துறை இருப்பது பலன். , இது நமது துணை முதலமைச்சரின் கீழ் வரும் - மன்னிக்கவும், எங்கள் அமைச்சர் உதயநிதி, ஆகஸ்ட் 19 க்கு முன் அவரை அப்படி அழைக்க முடியாது." எனக்கூறியதும் குறிப்பிடத்தக்கது.