கொல்கத்தாவில் வாக்கு பெட்டிகள் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் அடாவடியாக நுழைந்த மம்தா பானர்ஜி
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்கத்தில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்த அவர், EVMகளில் முறைகேடு செய்ய முயன்றால் அது "வாழ்வா-சாவா" போராட்டமாக மாறும் என மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக 190 இடங்களுக்கும் மேல் பெற்று திரிணாமுல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் எனப் பெரும்பாலான கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் கணிப்புகளை "உளவியல் போர்" என வர்ணித்த மம்தா, தொண்டர்களை வாக்குகள் எண்ணும் இடத்தை சுற்றி காவல் இருக்குமாறு தெரிவித்தார்.
அதிரடி
ஸ்ட்ராங் ரூம் விசிட்: மம்தா அதிரடி
கொல்கத்தாவில் உள்ள சக்காவத் மெமோரியல் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு இயந்திரப் பாதுகாப்பு அறைக்கு மம்தா பானர்ஜி திடீரென சென்றார். சிசிடிவி (CCTV) காட்சிகளில் சில சந்தேகத்திற்குரிய அசைவுகளைக் கண்டதால், வேட்பாளர் என்ற முறையில் தனது உரிமையைப் பயன்படுத்தி உள்ளே சென்றதாக அவர் தெரிவித்தார். தொடக்கத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்த போதிலும், சட்டப்பூர்வமாகத் தனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டி அவர் உள்ளே நுழைந்தார். "யாராவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் திருடவோ அல்லது திருத்தவோ முயன்றால், நான் என் வாழ்நாள் முழுவதும் போராடுவேன். இது ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக இருக்கும்," என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜியின் வருகையை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் சில வீடியோக்களைப் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து ஸ்ட்ராங் ரூம்களில் முறைகேடு செய்வதாக TMC குற்றம் சாட்டியுள்ளது. "மம்தா ஒரு உத்தரவு போட்டால், அடுத்த நிமிடமே 10,000 பேர் அந்த இடத்தில் திரளுவார்கள். சட்டத்தின் மீதான மரியாதையால்தான் நாங்கள் அமைதி காக்கிறோம். எங்களின் அமைதியை பலவீனம் என்று நினைக்க வேண்டாம்," என அக்கட்சி எச்சரித்துள்ளது
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Our media-savvy @CEOWestBengal, Mr. Manoj Kumar Agarwal, should prioritise his constitutional mandate over late-night press conferences. While he is busy managing optics, @BJP4India has been caught on CCTV attempting to forcefully breach sealed ballot boxes at the Netaji Indoor… pic.twitter.com/saeBC7n9n5
— All India Trinamool Congress (@AITCofficial) April 30, 2026
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BJP and their compromised Election Commission have no idea who they are dealing with.
— All India Trinamool Congress (@AITCofficial) April 30, 2026
They have imported operatives from other states to swarm the area outside the Netaji Indoor Stadium, staging a media spectacle to mask their fear. We do not need to mobilize. At one command… pic.twitter.com/PHQk7K5fiQ