தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1-ஏப்ரல் 3ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆக இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°C ஆக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.