வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26
மார்ச் 22ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 23ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது மார்ச் 24-26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம்.