Page Loader
வானிலை அறிக்கை: மார்ச் 16- மார்ச் 20
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை

வானிலை அறிக்கை: மார்ச் 16- மார்ச் 20

எழுதியவர் Sindhuja SM
Mar 16, 2023
02:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான வெப்பநிலைகள்