அடுத்த செய்திக் கட்டுரை

வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14
எழுதியவர்
Sindhuja SM
Mar 10, 2023
02:00 pm
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 10-11ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.