அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 14
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-15 மற்றும் ஜூன்-16
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன் 17
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன் 18
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
செட்ஸ்ப்
'பிப்பர்ஜாய்' புயலால் குஜராத்தில் வெளியேற்றப்பட்ட மக்கள்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
'பிப்பர்ஜாய்' புயலுக்கான எச்சரிக்கை:
பிபர்ஜாய்' புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கு தென்மேற்கே 290 கிமீ தொலைவிலும், தேவபூமி துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே 300 கிமீ தொலைவிலும், நலியாவில் இருந்து மேற்கு-தென்மேற்கே 310 கிமீ தொலைவிலும், வடகிழக்கு அரபிக்கடலில் தற்போது மையம் கொண்டுள்ளது.
ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.