
'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா பேட்டி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் வேலையின்மை குறித்து பரபரப்பாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் இல்லை என தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளாமல் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் தேடுவதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இங்குள்ள வடமாநில தொழிலாளிகள் பணிக்கு சென்று மாதம் 18 ஆயிரம் கோடி வருவாயை வடமாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள்.
அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் வணிகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இவர் கரூரில் நடந்த மண்டல கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
வரும் மே 5ம்தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - விக்கிரமராஜா பேட்டி
#JustIn | “வேலை தருவதற்கு நாங்கள் தயார்!” -தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி #SunNews | #NorthIndians | #TamilNadu pic.twitter.com/JiGi7d786Z
— Sun News (@sunnewstamil) February 17, 2023