Page Loader
கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி
விமான நிலையத்தின் கூரை வழியாக ஒழுகும் மழை நீர்

கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2024
09:01 am

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையுடன் கூடிய திடீர் புயலால், அசாமின் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இந்த சம்பவத்தால் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலைய அதிகாரிகள், மற்ற செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, ஆறு விமானங்களை மற்ற இடங்களுக்கு திருப்பிவிட்டனர். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோ, கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுவதை காட்டுகிறது. கூரை இடிந்து விழுந்ததும், அங்கிருந்த பயணிகளும் விமான நிலைய ஊழியர்களும் தப்பி ஓடினர்.

ட்விட்டர் அஞ்சல்

கவுகாத்தி விமான நிலையம்!

ட்விட்டர் அஞ்சல்

கூரை வழியாக ஒழுகும் மழை நீர்