உலக கிக்பாக்ஸிங் போட்டி - தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி
உலக Wako இந்தியா கிக்பாக்சிங் சார்பில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியானது நவம்பர்.,17ம்.,தேதியிலிருந்து 26ம்.,தேதி வரை போர்ச்சுகலில் நடக்கவுள்ளது. இதில் பல நாடுகளை சேர்ந்த கிக்-பாக்ஸர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில் 39 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. முதன்முறையாக இந்தியா சார்பில் தமிழ்நாடு மாநிலத்தினை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பாக்ஸர்கள் பங்கேற்கிறார்கள், இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்று இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்கள் 8 பேருக்கு தலா ரூ.1.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.