Page Loader
சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

எழுதியவர் Nivetha P
Apr 07, 2023
08:04 pm

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலம் சபரிமலையில் சித்திரை மாத விஷூகனி தரிசனம் வரும் 15ம்தேதி நடக்கிறது என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த விஷூகனி தரிசனத்திற்காக பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. தமிழகத்தில் சித்திரை.1 இம்மாதம் 14ம்தேதி வருகிறது. ஆனால் கேரள பஞ்சாங்கத்தில் சித்திரை 1ம் தேதி இம்மாதம் 15ம்தேதி தான் வருகிறது. இதன்படி அன்றையத்தினம் சபரிமலை கோயிலில் ஐயப்பன் முன்பு காய்கனிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த நிலையில் மூலஸ்தானம் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு ஐயப்பன் தரிசனம் அளிப்பார். இந்த விழாவையொட்டி இக்கோயிலின் நடை வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் முதல் பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, வரும் 19ம்தேதி இரவு 10மணிக்கு நடை சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம்